தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பேருந்து ஓட்டுனர் தீக்குளிப்பு
1 min read
Government bus driver sets himself on fire in front of the Tenkasi Collector’s office.
12.10.2026
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுதென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியன் (வயது 43) இவர் இன்று மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயிலில் தான் கொண்டு வந்த தின்னரை தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார் உடலில் தீ பற்றிய நிலையில் அவர் கூச்சலிட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர் அதற்குள் அவர் தலை மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்ப்பட்டது.
உடனடியாக அவரை மீட்ட போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதல் கட்ட விசாரணையில் இவர் அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக அதிகாரிகள் இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுக்க வந்த போது மனம் உடைந்த நிலையில் தான் கொண்டு வந்த தின்னரை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.