October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

வருகிற 16-ந் தேி தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

1 min read

Tenkasi District Farmers’ Grievance Redressal Meeting on the 16th

12.10.2026
2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 16.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற உள்ளது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *