October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

காலம் கடந்து நிற்கும் கவிஞர்கள்’-நூல் வெளியீட்டு விழா

1 min read

‘Poets Who Transcend Time’ – Book Launch Ceremony

12.10.2026
எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான தனராஜ் எழுதிய ‘காலம் கடந்து நிற்கும் கவிஞர்கள்’ நூல் வெளியீட்டு நேற்று (11-10-2026) மதுரை செய்தியாளர்கள் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்குச் செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கதிரவன் தலைமைவகிக்க, செயலாளர் இரமேஷ்பாண்டியன், பொருளாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். நூலாசிரியர் தனராஜ் வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, எழுத்தாளர் ஜி.வி.ரமேஷ்குமார், தி இந்து நாளிதழ் தலைமை நிருபர் ஸ்ரீகிருஷ்ணா, மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை, ஆசிரியர் சுலைகாபானு, பாடலாசிரியர் மாயவநாதன் அவர்களின் புதல்வர் செல்லவேல், மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் வேலுச்சாமி வாழ்த்துரை வழங்கினர். பத்திரகையாளர்கள், விக்னேஷ் அவென்யு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்வை நல்லாசிரியர் மகேந்திர பாபு தொகுத்து வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *