October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே மின்வேலியில் சிக்கி மான் பலி- ஒருவர் கைது

1 min read

Deer dies after getting caught in electric fence near Kadayam; one person arrested.

12.10.2026
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட சிவசைலம் பிரிவு கடையம் பெரும்பத்து கிராமத்திலுள்ள ஏத்தமரக்காடு பகுதியில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை கம்பி வேலியில் பாய்ச்சியதால் கம்பிவேலியில் அடிபட்டு மான் ஒன்று உயிரிழந்தது.

இதுகுறித்து, அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநரின் உத்தரவின்படி, கடையம் வனச்சரகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் வனப்பணியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், இக்குற்றத்தில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஏசுவடியான் (வயது 65) என்பவர் கைது செய்யப்பட்டு, தென்காசி நீதிமன்ற நடுவர் உத்தரவின்படி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *