October 14, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல் அமைச்சர் விஜய்யை நான் புகழ்ந்து பேசவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதி விளக்கம்

1 min read

I did not praise Chief Minister Vijay: Supreme Court judge clarifies.

14.10.2026
தவெக தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான விஜய் சிறப்பாக செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சய் குமார் பாராட்டி பேசியதாக சமீபத்தில் தகவல் வெளியானது .ஆனால் இதனை நீதிபதி சஞ்சய் குமார் மறுத்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறியீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், இதனை நான் விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறிய நீதிபதி அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வழக்கை வேறு அமர்வு முன்பு பட்டியலிடுவதற்காக பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் தவெக தொடர்பாக தான் புகழ்ந்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியாக இருக்காது. முன்பு தமிழ்நாடு தொடர்பான ஒரு குற்ற வழக்கை அரசு வழக்கறிஞர் ஒத்திவைக்க கோரினார். அப்போது சில கருத்துகளை கூறினேன். தமிழக முதல் அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என்ற ஒரு தகவல் கிடைத்ததாகவும், ஆனால் நீங்கள் ஏன் வழக்கை தொடர்ச்சியாக ஒத்தி வைக்க கோருகிறீர்கள் என்று தான் கேள்வி எழுப்பினேன். ஆனால் நான் தமிழக வெற்றி கழகத்தை புகழ்ந்தது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து கூட தமிழக வெற்றி கழகத்தை புகழ்ந்து பேசியதாக தனக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டது. உண்மையில் நான் கூறியது முற்றிலும் வேறுவிதமானது.

முதல் அமைச்சர் வேகமாக செயல்பட விரும்புகிறார் என்றால் நீங்கள் ஏன் மெதுவாக செயல்படுகிறீர்கள். வழக்கை ஏன் ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்ற பொருளில் நான் கூறியிருந்தேன். அது அப்படியே தவறாக தகவல் பரப்பப்பட்டுள்ளது. தமிழக முதல்வரை புகழ்ந்து பேசியதாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

எனவே தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தஒருவரின் வழக்கை தான் விசாரித்தால் சரியாக இருக்காது என்பதால் தார்மீக அடிப்படையில் இந்த வழக்கில் இருந்து விலகுகிறேன். நான் அல்லாத வேறு ஒரு அமர்வில் செங்கோட்டையனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட இந்த மனுவை பட்டியலிட பரிந்துரை செய்கிறேன்” என்றார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *