October 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் விபத்து மீட்பு தின நிகழ்ச்சி- ஆட்சியர் பார்வையிட்டார்

1 min read

Accident Rescue Day event in Tenkasi – Collector conducts inspection16.10.2026
தென்காசியில் “ஒன்றிணைவோம்! விபத்துக்கள் இல்லா உலகத்தைப் படைப்போம்! சாலை பாதுகாப்பைப் பின்பற்றுவோம்! உயிர்களைக் காப்போம்”- உலக விபத்து மீட்பு தின நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அளவிலான உலக விபத்து மீட்பு தின நாள் இன்று தென்காசி புதிய பேருந்து நிலையம் தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் வைத்து பொது மக்கள் முன்னிலையில் அவசர காலங்களில் ஏற்படும் விபத்துகளின் போது உயிரை காக்கும் முதலுதவி முறைகள் மற்றும் எனப்படும் பொன்னான நேரங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவ குழுவினரால் நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அரசு தலைமை மருத்துவனையில் பார்வையிட்டார்.

விபத்துகள், தீ விபத்துகள், வன்முறை அல்லது இயற்கை இடர்ப்பாடுகளால் உடலிலும் மனதிலும் ஏற்படும் கடுமையான காயங்களைக் குறிக்கும்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17.விபத்துகள் மற்றும் தீவிர காயங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அவசர முதலுதவி மூலம் உயிர் காக்கும் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மற்றும் போதிய அவசர ஊர்தி , விபத்து சிகிச்சை மையங்களின் அவசியத்தை வலியுறுத்துவது ஆகும்.

போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில், 2011-ஆம் ஆண்டு இந்தியாவின் புது தில்லியில் முதல் உலக விபத்து காய தினம் நிறுவப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காயங்களால் உயிரிழக்கின்றனர். இது உலகளாவிய மொத்த மரணங்களில் சதவீதமாகும் (ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஒரு மரணம்).இந்தியாவில் ஆண்டுதோறும் காயங்களால் 10 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், 2 கோடி பேர் மருத்துவமனை களில்அனுமதிக்கப்படுவதாகவும்மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய சாலை மரணங்களில் 11% இந்தியாவில் நிகழ்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் 13 லட்சம் பேர் உயிரிழந்து ள்ளனர். 50 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.உலகளவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இறப்பதற்கு சாலை விபத்துகளே முதன்மைக் காரணமாக அமைகின்றன. நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தான் 90% சாலை மரணங்கள் நிகழ்கின்றன.

சாலைப் பாதுகாப்பு விதிகளையும், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகளையும் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டும்.இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக் கவசம் (Helmet) அணிவதும், காரில் செல்லும் போது இருக்கைப் பட்டைகள் அணிவதும் கட்டாயமாகும்.பயணத்தின் போது கைபேசி பயன்படுத்துவது மற்றும் உரத்த இசை கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.நீண்ட தூரப் பயணத்தின் போது நடுவே ஓய்வெடுக்க வேண்டும். ஓட்டுநர் சோர்வாகவோ, மதுபோதையிலோ அல்லது தூக்கக் கலக்கத்திலோ இருந்தால் வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. கடைசி நிமிடப் பதற்றத்தைத் தவிர்க்க பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

வீட்டிலும் வாகனத்திலும் எப்போது ஒரு முதலுதவி பாதுகாப்புப் பெட்டியை வைத்திருக்க வேண்டும். அடிப்படை உயிர் காப்பு நுட்பங்களைக் கற்றுக் கொண்டு அவசர காலத்தில் உதவ வேண்டும்.பிரேக்குகள், விளக்குகள், டயர்கள் போன்றவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். அதிக மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை படிப்படியாக அகற்ற வேண்டும்.

சாலை மேற்பரப்புகளை அடிக்கடி புதுப்பித்து, சாலைப் பாதுகாப்புஅடையாளங்களைசரியாகக் குறிக்க வேண்டும். சந்திப்புகளில் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பிரத்யேக இடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க வேண்டும்.

மெதுவாகச் செல்லும் மற்றும் வேகமாகச் செல்லும் வாகனங்களுக்குத் தனித்தனிப் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய சாலைகளும் சந்திப்புகளும் விசாலமாகவும், போதிய வெளிச்சத்துடனும் (Street lights) இருக்க வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகள் உலக விபத்து மீட்பு நாளில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *