October 16, 2026

Seithi Saral

Tamil News Channel

பாக்.,கிற்கு உளவு பார்த்த இருவர் கைது

1 min read

Two people arrested for spying for Pakistan

16.10.2026
பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பணியாற்றும், ஏஞ்சல் பாயல் என்ற பெண், ஆந்திராவின் விசாகபட்டினம் கடற்படை தளத்தில் பணியாற்றும் இன்ஜினியர் பொங்கு ரவி என்பவருடன், 2023ல், ‘பேஸ்புக்’ சமூகவலைதளம் மூலம் நண்பரானார். ரவியை ஆசை வார்த்தை கூறி கவர்ந்த அந்த பெண், விசாகபட்டினம் கடற்படை தளத்தில் உள்ள கப்பல்கள், நீர்மூழ்கிகளின் புகைப்படங்களை பெற்றார்.
விசாகப்பட்டினம்: இந்திய கடற்படை குறித்த ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்த வழக்கில் அடுத்தடுத்த கைது சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்காக, ரவிக்கும், அவரது நண்பர் கடாரி சீனிவாசுக்கும் பெரும் தொகையை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பினார். இந்த விவகாரத்தில், 13 கடற்படை வீரர்கள் உட்பட 18 பேர் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் ரவியை கைது செய்த போலீசார், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு கடந்த ஆண்டு தப்பி சென்ற கடாரி சீனிவாசை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இந்நிலையில் கடந்த 11ல் டில்லி விமான நிலையத்திற்கு வந்த சீனிவாசை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில் தடையை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி; அபிஜித் தீப்கே கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு தேசியக் கொடியை உயர்த்திப் பிடிப்போம் என்ற பெயரில் பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்தது.

இந்தப் பேரணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறிய டெல்லி போலீசார், பேரணியை ரத்து செய்யுமாறு அபிஜீத் தீப்கேவுக்கு அறிவுறுத்தினர். மேலும், கனாட் பிளேஸ் பகுதியில் பிஎன்.எஸ் சட்டம் 163-வது பிரிவின்கீழ் தடை உத்தரவுகள் அமலில் இருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, டெல்லியில் அபிஜீத் தீப்கே தங்கியிருந்த பகுதிக்கு பெண் காவலர்கள் உள்பட 15 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்றன்ர். போலீஸ் அனுமதி அளிக்காததால், போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அபிஜீத் தீப்கேவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

போராட்டத்திற்கு செல்லக் கூடாது என அபிஜீத் தீப்கேவிற்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் போராட்டத்திற்கு செல்ல முயன்றதால் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டார். டெல்லி கனோட் பிளேஸ் பகுதியில் கட்டுப்பாடுகள் போடப்பட்டு இருந்தாலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பலரும் மூவர்ண கொடியுடன் அங்கு திரண்டுள்ளனர்.மாணவர் அமைப்புத் தலைவர் நேஹாரா போராவும் போராட்டக் களத்திலேயே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *