பொட்டல்புதூரில் வெடிப்பொருட்கள் தயாரித்த 8 பேர் கைது
1 min read
8 people arrested for manufacturing explosives in Pottalputhur
18/10/2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்த 8 நபர்களை போலீசார் கைது செய்தனர்
கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஜின்னா மகன் பாட்சா (வயது 35) என்பவருக்குச் சொந்தமான வீடு பொட் டல்புதூர் – காவூர் செல்லும் சாலையில் உள்ளது. ஊருக்கு வெளியே அமைந்துள்ள இந்த வீட்டில் அனுமதியின்றி வெடிப் பொருள்கள் தயாரிப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அன்பின் நக ரைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் அண்ணாதுரை என்பவர் பாட் சாவிடம் இருந்து வீட்டை வாட கைக்கு எடுத்து அனுமதி யின்றி வெடிப்பொருட்கள் தயாரித்தது தெரியவந்தது.
இதையடுத்து பொட்டல்பு தூர் கிராம நிர்வாக அலுவலர் பியூலா தேவி கொடுத்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார், அண்ணாதுரை, வெம்பக்கோட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் (வயது 26), அதே பகுதி அன்பின்நகரம் எஸ்.பி.எம். சர்ச் தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் (வயது 26), ராஜபாண்டி (வயது 33), திருத்தங்கல் சத்யா நகரைச் சேர்ந்த அந்தோ ணிராஜ் (வயது 48), சாத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்த அருண் குமார் (வயது 39), வெம்பக்கோட்டை கோவில் செந்திட்டியாபுரம் கிழக்குத் தெரு வைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 31), வெம்பக்கோட்டை அன்பின் நகர் தெற்குத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (வயது 32) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து சிறுவனை தவிர்த்து மற்ற 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமி ருந்து 150 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.