தென்காசி அருகே ரூ 1கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.4.40 லட்சம் மோசடி-ஒருவர் கைது
1 min read
Man arrested for swindling Rs 4.40 lakh near Tenkasi by promising to secure a loan of Rs 1 crore
18.10.2026
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் தனது தொழிலை மேம்படுத்துவ தற்காக பெருந்தொகையை கடனாக வாங்க முயற்சித் துள்ளார்.
இந்நிலையில் குமாருக்கு தெரிந்த செல்வராஜ் என்பவரின் மூலமாக, தென்காசி மாவட்டம் நன்னகரத்தைச் சேர்ந்த நாகூர்மீரான் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாகூர்மீரான் தன்னிடம் ரூ.1கோடி வரை கடன் பெற்றுத்தர முடியும் என்றும், அதற்கான நடைமுறைச் செலவுகளுக்காக முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் குமாரிடம் ஆசை வார்த்தை கூறியதாகதெரி கிறது.
இதனை நம்பிய குமார் கடந்த 2023 ஏப்ரல் 5ம்தேதி ஜெயங்கொண்டத்தில் உள்ள வங்கி மூலமாக, தென்காசியைச் சேர்ந்த ஈசாக் மைதீன்அலி என்பவரது வங்கி கணக்கிற்கு ரூ.70 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏப்.6ம் தேதியும் அதே வங்கி கணக்கிற்கு மேலும் ரூ.70 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பின்னர் குமாரும், அவரது நண்பர் செல்வராஜும் நேரில் சென்று நாகூர் மீரான் வீட்டில் வைத்து ரூ.3 லட்சத்தை கையில் கொடுத்துள்ளனர். ஆக மொத்தம் ரூ.4.40 லட்சத்தை நாகூர்மீரானிடம் குமார் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கூறியபடி
ரூ.1 கோடி கடனை வாங்கித்தரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குமார் தான் கொடுத்த முன்பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை நேரில் சென்றும், தொலை பேசியிலும் கேட்டுள்ளார். பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்த நாகூர்மீரான், மீண்டும் பணத்தை கேட்டு தென்காசி பக்கம் வந்தால் ஆட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்த குமார், இதுகுறித்து தென்காசி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்ஐ மாரிச்செல்வி தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அதன் அடிப்படை யில், மோசடிப்பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளரான செங்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈசாக்மைதீன் அலி (வயது 43) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வான முக்கிய நபரான நாகூர்மீரானை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.