October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் 17 வயது சிறுமிக்கு திருமணம்- 5 பேர் மீது வழக்குப்பதிவு

1 min read

Marriage of 17-year-old girl in Thoothukudi – Case registered against 5 people

18.10.2026
தூத்துக்குடி விவேகானந்தர் நகர் பகுதியில் கடந்த ஜூன் 25-ம் தேதி 17 வயது சிறுமி ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறைக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரி, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார்.

சமூக நலத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபரின் பெற்றோர் உள்பட இருதரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *