October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆட்சிக்கு வரும் கட்சியில் சேரும் சமூக விரோதிகள் – அண்ணாமலை வேதனை

1 min read

Anti-social elements joining the party that comes to power – Annamalai expresses concern

20.10.2026
‘‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதில் சமூக விரோதிகள் தங்களை இணைத்துக்கொள்வது வாடிக்கையாகி விட்டது,” என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 செல்வோரில், ஒன்பது சதவீத மாணவர்கள், ஆறு சதவீத மாணவியர் எண்ணிக்கை குறைந்து விட்டது. உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை, 50 சதவீதத்திலிருந்து, 47 சதவீதமாக குறைந்து விட்டது.
ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை மத்திய அரசு அனுமதிக்க மறுத்ததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிரமம் ஏற்படுகிறது. வெளிநாட்டு மொழிகளுக்கு மத்திய அரசும், இந்திய மொழிகளுக்கு மாநில அரசும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவறு. மத்திய அரசு, 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்.

கடந்த தி.மு.க., ஆட்சியின்போதே, கஞ்சா கடத்தலில் த.வெ.க.,வினர் ஈடுபட்டனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சமூக விரோதிகள், தங்களை அதில் இணைத்துக்கொள்வது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. இதனால் உள்ளூர் போலீசார் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். இதை தடுக்க, இரும்புக்கரம் கொண்டு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளரை, கோவைக்கு போலீசார் சென்று கைது செய்தது ஏன்? இது, நோட்டீஸ் வழங்கி, 24 மணி நேரத்தில் வருமாறு கூறக்கூடிய வழக்கு தான். ஆளுங்கட்சியின் கைப்பாவையாக, போலீசார் மாறக்கூடாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *