கனடாவில் இருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியாது- மக்கள் ஓட்டு
1 min read
People of Alberta province vote against separating from Canada
20.10.2026
வட அமெரிக்க நாடான கனடாவின் எண்ணெய் வளம் நிறைந்த மாகாணமாக உள்ளது ஆல்பர்ட்டா. மத்திய அரசுடன் நிலவும் முரண்பாடுகள் மற்றும் மேற்கு பகுதி மாகாணங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாகவே உள்ளன.
மேலும், ஆல்பர்ட்டா மீது விதிக்கப்படும் கடுமையான சுற்றுச்சூழல் விதிகள், எண்ணெய் குழாய் திட்டங்களுக்கு தடை உள்ளிட்டவை தங்கள் பொருளாதாரத்தை முடக்குவதாக அம்மாகாண பிரிவினைவாதிகள் வாதிட்டு வருகின்றனர்.
இதையடுத்து மக்களின் கருத்தைக் கேட்கும் ஓட்டெடுப்பை நடத்த அவர்கள் வலியுறுத்தினர்.
இதில் விருப்பம் இல்லாத அம்மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் பிரிவினைவாதிகளின் அழுத்தம் காரணமாக ஓட்டெடுப்புக்கு சம்மதித்தார். நேற்று முன்தினம், கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தொடர்ந்து கனடாவுடன் இருப்பதையே விரும்புவதாக 76 சதவீத மக்களும், பிரிவினைக்கான செயல்முறைகளை தொடங்க வேண்டும் என 23 சதவீத மக்களும் ஓட்டளித்தனர்.