October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தனது தொகுதி நிதியை திமுக எம்எல்ஏ தொகுதிக்கு ஒதுக்கீடு செய்த கீர்த்தனா

1 min read

Keerthana, a DMK MLA, allocated her constituency funds to her constituency

20.10.2026
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டசபை தொகுதி தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, சமூகநலன், மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும் இவரே.
ராஜபாளையம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து,18 ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி, சாலை, மயானம், நிழற்குடை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, 2.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் ஜெகதீஸ்வரி பரிந்துரைப்படி, இந்த நிதியில் பணிகளை மேற்கொள்ள கலெக்டர் ஷரண்யா உத்தரவிட்டார்.
ஆனால், இந்த நிதி ஒதுக்கீட்டில், திமுக வெற்றி பெற்ற சாத்துார் தொகுதிக்கு உட்பட்ட, ராஜபாளையம் ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள சமுசிகாபுரம், மேல ராஜகுலராமன், சோழபுரம் ஆகிய ஊராட்சிகளில் பணிகளை மேற்கொள்ள, 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.
தவெக வெற்றி பெற்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திமுக வெற்றி பெற்ற தொகுதிக்கு பணம் ஒதுக்கியதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகையில், ”மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களின் அடிப்படையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பணிகளுக்காக பணம் ஒதுக்கி, கலெக்டர் உத்தரவிட்டார். அதில், மூன்று ஊராட்சிகள், அருகிலுள்ள சாத்துார் தொகுதியை சேர்ந்தவை என, தெரிந்ததால், உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *