October 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்ணாடி பெட்டிகள் இணைப்பு

1 min read


Glass-paneled coaches attached to the Madurai–Guruvayur Express train

20.10.2026

மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்ணாடி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த ரயிலில் பயணம் செய்ய ரயில் வே நிர்வாகம் விதித்துள்ள கட்டணத்தை கேட்டாலே பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக அந்த ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என
தென்காசி ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

தென்காசி, அக் – 21

இதுகுறித்து தென்காசி ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு ரயில் யூஸஸ் ஃபெடரேஷன் சார்பாகவும்
விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் இருந்து குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் விஸ்டோடம் என அழைக்கப்படும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப் படுகிறது. இது ஒரு நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது தென்னக ரயில்வேக்கு பாராட்டு.

இந்தப் பெட்டியின் விசேஷம் என்னவென்றால் மற்ற பெட்டிகள் போல் இல்லாமல் இந்த பெட்டிகளில் மேல் கூரையிலும் , இருக்கை சுற்றிலும் உள்ளிருந்து வெளிப்புறம் பார்ப்பது போலும் ,வெளிப்புறத்தில் இருந்து உள்ளே பார்ப்பது போலும், ட்ரான்ஸ்பரென்ட் , கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பெட்டிகளாகும்.

இதனால் என்ன பயன் என்றால் இந்த பெட்டியில் பயணிக்க கூடியவர்கள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிக்கலாம் ,அதுவும் குறிப்பாக, தென்காசியில் இருந்து செங்கோட்டை, புனலூர், கொல்லம் செல்லும் வழியில் இந்த வண்டி இயக்கப் படுவதால் , அதுவும் மலைப்பிரதேசங்கள் வழியாக செல்வதால், இந்த பெட்டியில் அமர்ந்த வாரே, அழகான மலைகள் ,நீர்வீழ்ச்சிகள், ஆழமான பள்ளத்தாக்கு ,டனல் என்று அழைக்கப்படும் குகைகள், மேலே பார்க்கும் போது மரங்களும் ,அழகான நீல நிற வண்ணம் கொண்ட மேகமும் நம் கண்ணுக்கு விருந்தளிக்கும், இத்தனை இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து கொண்டு செல்லலாம்.

ரயில்வே நிர்வாகம் இந்த வண்டியில் பெட்டிகளை இணைத்தது ,மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். தற்சமயம் ஒரே ஒரு பெட்டி மட்டும் இணைக்கப்பட்டுள்ளது,

பயணிகளின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படலாம் என்று நம்புகிறோம், மக்களிடம் வரவேற்பு இருந்தால் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாகவும் ,தமிழ்நாடு ரயில் யூஸஸ் ஃபெடரேஷன் சார்பாகவும் ,நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அதே சமயத்தில் இந்த வண்டியில் இந்த பெட்டியில் பயணிப்பதற்கான கட்டணத்தை கேட்டாலே அதிர்ச்சியாக உள்ளது. அந்த ரயிலில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள கட்டண விபரம் பின்வருமாறு :-
வண்டி எண் 16 327 / 16328

தென்காசி குருவாயூர்- ரூபாய் 1380.00, தென்காசி கொல்லம் ரூபாய் 660.00, தென்காசி புனலூர் ரூபாய் 665.00,
மதுரை தென்காசி ரூபாய் 845.00,மதுரை குருவாயூர் ரூபாய் 1875.00 ஆகும்.

இது பொது மக்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக இருக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த பெட்டியில் பயணிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும். ,ஆகவே ரயில்வே நிர்வாகம் ஏழை எளிய, சாமானிய பொது மக்களும் இந்த பெட்டியில் பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு இந்தப் பெட்டியின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

சாமானிய ஏழை எளிய மக்கள் இந்த பெட்டியை புறக்கணிப்பதற்கு கட்டணம் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. கட்டணம் ஓரளவிற்கு நியாயமாக இருந்தால்தான் அனைத்து தரப்பு மக்களும், சாமானியர்களும் பயணிப்பார்கள். இந்தப் பெட்டிக்கு முழு வரவேற்பும் கிடைக்கும். இல்லை என்றால் கட்டணத்தின் காரணமாக மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டால், ரயில்வே நிர்வாகம் இந்த பெட்டியை அறிமுகப்படுத்தியும் எந்தவிதத் பயனும் இல்லாமல் போய்விடும்.

ஆகவே எங்களது கருத்துக்கு செவி சாய்த்து ரயில்வே நிர்வாகம் ஆரம்பத்திலேயே இந்தப் பெட்டிக்கான கட்டணத்தை குறைப்பதோடு கூடுதலாக இன்னும் ஓரிரு பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்று தென்காசி ரயில் பயணிகள் நலசங்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு ரயில் கூட்டமைப்பின் சார்பாகவும் தென்னக ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமிழ்நாடு ரயில் யூஸஸ் ஃபெடரேஷன்தலைவர்
ந.சுப்பிரமணியன் மற்றும் தென்காசி ரயில் பயணிகள் நலசங்கம். தலைவர் என்.
வெங்கடேஸ்வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *