October 20, 2026

Seithi Saral

Tamil News Channel

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள்… – தசரா விழாவில் மோடி ஆவேசம்

1 min read

Those who tarnish the nation’s honor… – Modi’s impassioned remarks at the Dussehra festival

20/10/2026
டெல்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தீமை வீழ்ந்து நன்மை வெற்றி பெற்றதை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். இந்நாள் சத்தியம் மற்றும் நீதியின் அழியாத வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது. ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் சேவை செய்வதே நமது முன்னுரிமை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடவுள் ராமரை நமது முன்னோர்களும், இந்தியாவும் வழிபட்டனர். மனிதகுல வரலாற்றில் ஈடு இணையற்ற லட்சியங்களை ராமர் நமக்கு வழங்கியதால் இந்த நம்பிக்கை உண்டானது. ராமர் தன் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், சத்தியம் மற்றும் கொள்கையின் பாதையை கைவிடவில்லை. ராமர், தன் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த போதும், சத்தியம் மற்றும் கொள்கையின் பாதையை ஒரு போதும் கைவிட்டது இல்லை.
ராமரின் வாழ்க்கை நமக்கு ஒரு ஆழமான பாடத்தை வழங்குகிறது. நெருக்கடி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது சவால் எவ்வளவு அச்சுறுத்தலாக இருந்தாலும், நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது. நமது சொந்த ஆற்றலை அங்கீகரிக்க வேண்டும். நமது சொந்த வளங்களை நம்ப வேண்டும். நமது உறுதியை வலிமையாக மாற்ற வேண்டும். நமது கடின உழைப்பின் மூலம் தீர்வுகளை உருவாக்க வேண்டும். இன்று, நாமும் இந்த வழிகாட்டுதலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ராமராஜ்ஜியத்தில் யாருக்கு எதிராகவும் பாகுபாடு இல்லை. அனைவருக்கும் சமமான நீதி மற்றும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
வளர்ந்த இந்தியா மற்றும் தன்னிறைவு பெற்ற பாரதம் ஆகிய இலக்குகளை நாம் முன்வைத்துள்ளோம். நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள். அவர்களை அடையாளம் கண்டு தோற்கடிக்க வேண்டும். அதிகாரத்தின் நோக்கம் ஆள்வதற்குஅல்ல. மாறாக பொது மக்களின் நலனை உறுதி செய்வது. அதுவே ராமரின் லட்சியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *