சங்கரன்கோவில் அருகே ஊருக்குள் புகுந்த புள்ளி மான்
1 min read
A spotted deer entered a village near Sankarankovil
23.10.2026
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமான்! உயிருடன் பிடித்து கிராம மக்கள் வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு அருகில் உள்ள வாடிக்கோட்டை கிராமத்தில் நேற்று காலை சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த மானைப் பாதுகாப்பாக உயிருடன் பிடித்தனர், உடனடியாக புளியங்குடி வனத்துறை யினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், புள்ளிமானை மீட்டு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.
வனத்துறையினருடன் இணைந்து கிராம மக்களும் புள்ளிமானை உயிருடன் மீட்டு ஒப்படைத்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு பாராட்டைப் பெற்றுள்ளது…