October 25, 2026

Seithi Saral

Tamil News Channel

தேர்தல் கமிஷனர்கள் புகார் கடிதம் தகவல் வெளியானதால் மீண்டும் சர்ச்சை

1 min read

Fresh controversy arises following the leak of a complaint letter from Election Commissioners

23.10.2026
தேர்தல் கமிஷனின் மூத்த அதிகாரிக்கு எதிராக, இரண்டு தேர்தல் கமிஷனர்கள், மத்திய அமைச்சரவை செயலருக்கு புகார் கடிதம் எழுதியது, ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் மூலம் உறுதியாகி உள்ளது. இதன் மூலம், தேர்தல் கமிஷனுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்களைச் சேர்ப்பது மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, இரு தேர்தல் கமிஷனர்களும் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், வாக்காளர் தகவல்தளத்தின் நம்பகத்தன்மை குறித்து அமைச்சரவை செயலர் டி.வி.சோமநானிடம் கவலைகளை எழுப்பி கடிதம் எழுதியதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மையமாக வைத்துதான், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த சூழலில், இரு தேர்தல் கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், கடந்த ஜூலை 29ல், மத்திய அமைச்சரவை செயலர் டி.வி. சோமநாதனுக்குத் தனித்தனியாகக் எழுதிய கடிதங்களின் விபரம், தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமைச்சரவை செயலருக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தில், தேர்தல் கமிஷனுடனோ, அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனோ, எவ்வித கலந்தாலோசனையும் இல்லாமல், பணிப்பகிர்வு மாற்றங்களை மூத்த துணைத் தேர்தல் கமிஷனர் மணிஷ் கர்க் செய்துள்ளதாக இரு தேர்தல் கமிஷனர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *