கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தில் சோதனை-ஜி.பே. மூலம் ரூ.2.94 லட்சம் பெற்றது அம்பலம்
1 min read
Inspection at Keelapavoor Union Office: Receipt of Rs. 2.94 lakh via G-Pay uncovered
23.10.2026
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., பால்சுதர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
நேற்று மாலை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். அப்போது கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இல்லை.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.
பால்சுதர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்தறை போலீசார், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இந்த சோதனையில் ரொக்கப் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.ஆனால்
அலுவலகத்தில் இருந்த இரண்டு ஓவர்சீர்கள், ஒரு கணக்காளர், ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆகியோர் ஜி.பே., மூலம் ரூ.2.94 லட்சம் பணம் பெற்றதற்கான விவரங்கள் கிடைத்தன.
தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, நான்கு அலுவலர்கள் ஜி.பே., மூலம் பணம் பெற்றதற்கான பரிவர்த்தனை விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரூ.2.94 லட்சம் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் கிடைத்தன. இதுகுறித்து தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.