October 23, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம்

1 min read

Tenkasi: Consultative meeting regarding the reorganization of polling stations

23/10/2026
தென்காசி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2027 பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதை அடுத்து, வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் 220 வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 193, 194 ஆகிய இரு பாகங்களில் பிரிவுகள் மாற்றம் (Rearrangement of Sections) செய்யப்படவுள்ளது. 221 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 100-ஐ இரண்டாகப் பிரித்து கூடுதலாக 1 பாகம் உருவாக்கம் செய்யப்பட உள்ளது மற்றும் பாகம் எண் 2, 3 ஆகிய 2 வாக்குச்சாவடிகளை கட்டிட மாற்றம் (Building Change) செய்யப்படவுள்ளது. 222 தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண் 282, 289 ஆகிய இரு பாகங்களை இரண்டாக பிரித்து கூடுதலாக 2 பாகங்கள் உருவாக்கம் செய்யவுள்ளது. பாகம் எண்கள் 281, 282,280, 289 ஆகிய 4 பாகங்களில் பிரிவுகள் மாற்றம் செய்யவுள்ளது, மற்றும் பாகம் எண் 290 வாக்குச்சாவடியை இடமாற்றம் செய்யவுள்ளது,

மற்றும் 223 ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்கள் 106, 294, 303, 331 ஆகிய வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதலாக 4 பாகங்கள் உருவாக்கம் செய்யவுள்ளது, பாகம் எண்கள் 175, 177 ஆகிய இரு பாகங்களில் பிரிவுகள் மாற்றம் (Rearrangement of Sections) செய்யவுள்ளது ஆகிய விவரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட மறுசீரமைப்பிற்கு பின்பு தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1687 பாகங்கள் இருக்கும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *