October 25, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு

1 min read

Virudhunagar: Skill-building training session for Village Administrative Officers

23/10/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு, போதை பொருட்கள் ஒழிப்பு கிராம அளவிலான கண்காணிப்பு குழு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:-

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம அளவில் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இத்தகைய சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிவதில் அவர்களின் பங்கு முக்கியமானதாகும். எனவே, கிராம அளவிலான கண்காணிப்புக் குழுவின் நோக்கங்கள், செயல்பாடுகள், பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் முறைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளைப் பெற்றுத் தருவதற்கான வழிமுறைகள் குறித்து அலுவலர்கள் தெளிவான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்கொடுமை, பள்ளி இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் சாத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கிராம கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

மேலும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன் கிழமையன்று கிராம கண்காணிப்பு குழு மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெறும். இதில் மேற்கண்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்து புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இப்பயிற்சியின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களின் செயல்திறனை மேம்படுத்தி, குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போதைப்பொருட்கள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமதி மீனாட்சி, திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்) ஷீலா சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *