October 25, 2026

Seithi Saral

Tamil News Channel

நவம்பர் 1-ந் தேதி கிராமசபை கூட்டம்- தென்காசி ஆட்சியர் தகவல்

1 min read

Gram Sabha meeting to be held on November 1st – Tenkasi Collector’s announcement

25.10.2026
தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சிகள் தினமான 01.11.2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக-மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு-3 மற்றும் சென்னை ஊரக வளர்ச்சி (மற்றும்) ஊராட்சித் துறை ஆணையர் அவர்களின் கடிதம் எண். 702 /2025 / ப.ரா.(நி) 2.1, நாள் : 16.10.2026 கடிதத்தில் தெரிவித்துள்ளபடி உள்ளாட்சிகள் தினமான 01.11.2026 அன்று காலை 11.00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருள்களாக,
1.கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல்,

  1. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை,
    3, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
    4.கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
    5.வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
    6.தமிழ்நாடு கிராம மேம்பாடு, மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு (TN VETRTI), 7.குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல்,
  2. தமிழ்நாடு பல்லுயிர் வாரியம்-பல்லுயிர் மேலாண்மைக் குழு (BMCs) குறித்து விவாதித்தல்,
    9.இழிவு தரும் சாதி பெயர்களை மாற்றம் செய்தல், 10. வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், 11. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-கிராமசபா கூட்டப்பொருள்கள், மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இக்கிராமசபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளமாறு மாவட்ட ஆட்சியர்ரஞ்ஜீத் சிங். கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *