தென்காசி மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்றுனர்கள் தேர்வு
1 min read
Selection of instructors for competitive examinations in Tenkasi district
25.10.2026
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC, TNUSRB, SSC, Railway, Banking ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு தற்காலிக பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC, TNUSRB, SSC, Railway, Banking ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் Smart Board பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி வகுப்புகளில் வகுப்பெடுக்க விரும்பும் பயிற்றுநர்கள் கண்டிப்பாக பி.பி.டி. பயன்படுத்தி மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு மதிப்பீட்டு வினாக்கள், மாதிரி தேர்வு வினாக்கள் ஆகியவற்றை தயார் செய்து Word Documentஆக வழங்கவேண்டும்.
இந்தப் பயிற்சி வகுப்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்படும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு மதிப்பூதியம் ரூ.800/hr வழங்கப்படும். இந்த பயிற்றுநர் பணி முற்றிலும் தற்காலிக பணியாகும்.
இப்பயிற்சி வகுப்புகளில் வகுப்பெடுக்க விருப்பம் உள்ள பயிற்றுநர்கள் தங்களது கல்வித்தகுதி, கல்வி கற்பிக்க விருப்பமுள்ள பாடப்பிரிவு, கல்வி நிறுவனங்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு வகுப்பெடுத்த முன்அனுபவம் ஆகியவற்றை குறிப்பிட்டு தங்களின் சுயவிவர படிவத்தினை(Resume) 28.10.2026 க்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்முகத்தேர்வுக்கு வரும்போது போட்டித்தேர்வு தொடர்பாக தாங்கள் தயார் செய்த பாடக்குறிப்பு. மாதிரிவினா, வகுப்பெடுக்க விரும்பும் பாடத்தின் பிபிடி ஆகியவற்றை உடன் எடுத்து வரும்படி கேட்டுக்ஸகொள்ளப் படுகிறது.
நேர்முகத்தேர்வுக்கான தேதி பின்னர் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். கூடுதல் தகவலுக்கு 04633-213179 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார்.