தென்காசி மாவட்டத்தில் 1533 குழந்தைகளுக்கு மோதிரம்- ஆட்சியர் தகவல்
1 min read
Rings for 1,533 children in Tenkasi district – Collector’s announcement
25.10.2026
முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும். தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும். அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும். “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை. மதுரை அரசு இராஜாஜி மருத்துமனையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றனர். அவற்றில் சுமார் 4.20 லட்சம் பிரசவங்கள் (53 விழுக்காடு) அரசு மருத்துவமனையில் நடைபெறுகின்றன. மேலும். தேசியகுடும்ப நலக் கணக்கெடுப்பு 6 தரவின்படி. தமிழ்நாட்டில் 99.9 விழுக்காடு பிரசவங்கள்மருத்துவமனை
களில் நடைபெறுகின்றன.
இவற்றில் 90% பிரசவங்கள் 130 அரசு மருத்துமனைகளில் பிரத்திமயகமாக உருவாக்கப்பட்டுள்ள விரிவான அவசர கால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் மையங்களில் (CEMONC) நிகழ்கிறது. அரசு மருத்துவமனைகள் மூலம் பாதுகாப்பான பிரசவ சேவைகள் மிகக் குறைந்த செலவில் வழங்கப்படுவதுடன், மக்களின் மருத்துவச் செலவினச் சுமையையும் வெகுவாகக் குறைகிறது.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில். வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல், அரசு மருத்துமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு இந்த ஆண்டு 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 28.09.2026 முதல் 23.10.2026 வரை 1533 குழந்தைகள் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.