November 1, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

1 min read

3 percent hike in dearness allowance for Tamil Nadu government employees

31.10.2026
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால், 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1,858 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

அரசின் இந்த நடவடிக்கை, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *