November 1, 2026

Seithi Saral

Tamil News Channel

வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்: ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு

1 min read

‘Vetri’ Women’s Goat Rearing Scheme: Rs. 109.75 crore allocated

31.10.2026
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


இதன்படி ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 தகுதி வாய்ந்த நபர்களுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது.

நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

இந்நிலையில் அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *