October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரண்டாம் திருமணம்

1 min read

Jammu and Kashmir Chief Minister Omar Abdullah’s second marriage

31.10.2026
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, 56, நிதி ரஸ்தானை, 49, திருமணம் செய்து கொண்டார். இது, இருவருக்கும் இரண்டாம் திருமணம்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவின் முதல் மனைவி பயல். இந்த தம்பதி, கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுக்கு முன் பிரிந்து விட்டனர்.
அவர்களது விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. விசாரித்த கோர்ட், இருவருக்கும் விவாகரத்து வழங்கி, இந்தாண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, தன் நீண்ட கால தோழியான ‘டிவி’ செய்தியாளர் நிதி ரஸ்தானை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

சிறப்பு திருமண சட்டப்படி இவர்கள் இருவரது திருமணம் நடந்துள்ளது. பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *