நெல்லையில் இந்த ஆண்டு புது வரவாக அறிமுகமானது ‘ஏபிசி அல்வா’
1 min read
‘ABC Halwa’ has been introduced as a new addition in Nellai this year.
31.10.2026
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அல்வாவுக்கு உலகப் புகழ்பெற்ற நெல்லையில் இனிப்பு மற்றும் கார வகைகள் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி விற்பனையின் முக்கிய ஈர்ப்பாக, ‘ABC அல்வா’ (ஆப்பிள், பீட்ரூட், கேரட் அல்வா) என்ற புதிய வகை இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்குத் தயாராகி உள்ளது
பொதுவாக நெல்லை கோதுமை அல்வா உலக அளவில் பிரசித்தி பெற்றது என்றாலும், இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் நுகர்வோரைக் கவரும் வகையில் ஆரோக்கியமான ஏபிசி அல்வா என்ற புதுமை புகுத்தப்பட்டுள்ளது. உடலுக்கு நன்மை தரும் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றின் கலவையில், கண்ணைக் கவரும் இயற்கை நிறத்துடனும் அலாதியான சுவையுடனும் இந்த அல்வா தயாரிக்கப்படுகிறது.
நெல்லையில் உள்ள முக்கிய இனிப்பு மற்றும் காரப் பண்டங்கள் தயாரிக்கும் கடைகளில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்த மாத இறுதியிலேயே ABC அல்வா விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி கூடங்களில் இதனைப் பிரெஷாகத் தயாரித்து, பொதுமக்கள் பண்டிகை காலப் பரிசாக வாங்குவதற்கும், சுவைப்பதற்கும் ஏதுவாக கடைகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
வழக்கமான இனிப்புகளோடு இந்த ஆண்டு இந்த புதுவகை ‘ABC’ அல்வாவையும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.