November 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் புகையிலை இல்லா விழிப்புணர்வு பேரணி

1 min read

Tobacco-free awareness rally in Tenkasi

2.11.2026
தென்காசியில்புகையில்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மரு.மோனிகா ரானா, துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்படுவோம் என்ற கருப்பொருளை மையமாக கொண்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 4.0 விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ரானா, இன்று (02.11.2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் புகையிலை பொருட்களின் பயன்பாட்டில் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கல்லூரி மாணவர்கள் ஏந்தி, பொது மக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை சென்றடைந்தது.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் டாக்டர் பிரேமலதா, வட்டார மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *