செங்கை அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு இலவச வேஷ்டி,சேலை வழங்கல்
1 min read
Distribution of free dhotis and sarees to the elderly by the Sengai Trust
3.11.2026
தென்காசி மாவட்டம் , செங்கோட்டை பெருமாள் சன்னதி தெருவில் இயங்கி வரும் தமிழ்நாடு செங்கை அறக்கட்டளை தொண்டு நிறுவனம் ஏழை,எளிய, மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் கல்வி உதவி தொகை, வழங்கல், இலவச பொது மருத்துவ முகாம்,மற்றும் மருந்துகள் வழங்கல், ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கல், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஏழை எளியோர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் ஏழை,எளிய, ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழச்சிக்கு அறக்கட்டளை நிறுவனத்தலைவா் ராமசுப்பிரமணியம் தலைமைதாங்கினார். துணை நிறுவனத்தலைவா் சுதாராம்ஜி முன்னிவைகித்தார். அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினா் சுடலைகம்பர் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பணிநிறைவு பெற்ற காவல் துறை அதிகாரி பரமசிவன் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினா்கள் மாரியப்பன், பாலமுருகன், மகேஷ்வரன் இப்ராஹீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.