புனேயின் 3-வது மெட்ரோ பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 min read
Prime Minister Modi inaugurated Pune’s 3rd Metro line via video conference.
3.11.2026
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிங்க் லைன் என அழைக்கப்படும் 3-வது மெட்ரோ ரெயில் தடம் ரூ.8,300 கோடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ ரெயில் பாதை 23 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
இதை பிரதமர் மோடி இன்று மதியம் 12.30 மணிக்கு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். புனேயின் நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய அம்சமாகும். அதோடு புனேயில் 4 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல்லும் நாட்டினார். அதை தொடர்ந்து அவர் உரையாற்றினார்.