பாவூர்சத்திரம் சாலையில் கிடந்த நகை, பணம்- போலீசில் ஒப்படைத்த முதியவர்
1 min read
Elderly man hands over jewelry and cash found on Pavurchatram road to the police
9/11/2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாப்பையா (வயது 76), இவர் பாவூர்சத்திர பகுதியில் நடந்து சென்ற போது சாலையில் கிடந்த ஒரு பையில் தங்க நகைகள்,பணம் ஆகியவை இருந்துள்ளது.
அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முதியவர் பாப்பையா உடனடியாக அந்த பையை பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் . அந்த முதியவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் விசாரணையில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியப்பபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது68) என்பவர் வாகனத்தில் செல்லும்போது தனது பையை தவறவிட்டுள்ளார்.
அதில் சுமார் 245 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 பணம் இருந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற மேட்டூரைச் சேர்ந்த பாப்பையா (76) என்பவர் அந்தப் பையை எடுத்துப் பார்த்தபோது அதில் தங்க நகைகள் மற்றும் பணம் இருப்பதை அறிந்து, பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் நகை மற்றும் பணத்தை ஒப்படைத்தார்.
பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் மூலமாக காணமால் நகை மற்றும் பணம் உரியவர்களை கண்டறிந்து ஒப்படைக்கப்பட்டது. முதியவரின் நேர்மை மற்றும் சமூக பொறுப்புணர்வை காவல்துறை மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.