November 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பண்பொழி திருமலைக் கோவிலில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சாமி தரிசனம்- வேல் காணிக்கை

1 min read
Minister Jagadeeswari offers prayers at the Thirumalai Temple in Panpozhi; presents a *vel* as an offering.
10/11/2026
பண்பொழி திருமலைக் கோவிலில் வேல் காணிக்கை செலுத்தி வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற பக்தர்களின் நம்பிக்கை இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால் இக்கோவிலுக்கு வேல் காணிக்கை செலுத்தி வழிபட்டார். தொடர்ந்து, தனது திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல், தமிழக அமைச்சரவையில் பதவியேற்ற பின்னர் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரான ராஜீவ், திருமலை முருகன் கோவிலுக்கு வேல் காணிக்கை செலுத்தி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அமைச்சர் ஜெகதீஸ்வரியும் திருமலை முருகன் கோவிலுக்கு வேல் காணிக்கை செலுத்தி குடும்பத்துடன் வழிபாடு நடத்தியுள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் சூழலில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் இந்தக் கோவில் வருகை கவனத்தைப் பெற்றுள்ளது.
கோவிலில் சாமி தரிசனம் முடித்த அமைச்சர், செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *