தென்காசி மாணவி கராத்தே தேசிய போட்டிக்கு தேர்வு
1 min read
Student from Tenkasi selected for national-level karate competition
10.11.2026
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 70-வது தேசியப் கராத்தே தேர்வு போட்டி ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி மாவட்டம் சார்பில் ஜெய்ஹிந்த் மார்சியல் ஆர்ட்ஸ் மற்றும் ஷோபூகாய் பயிற்சி மைய மாணவ- மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில் மாணவி ராஜபூஷிதா முதலிடம் பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் சஞ்சீவ் வேல், யோக தர்ஷினி, சுந்தர அர்ஜுன், ஜாப்ரின் பராக்கா, ரதியா ஆகியோர் 2ம் இடமும், மாணவர்கள் பிருந்தா, சந்தோஷ், விஷ்ணு ராம், கபிலன், அனிக்கேத், பிரமோத் செல்கே ஆகியோர் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஜெய்ஹிந்த் கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனரும், தென்காசி மாவட்ட கராத்தே அசோசியேசன் சங்கத் தலைவருமான சிவப்பிரகாஷ் மற்றும் தங்க முருகன், கணேஷ், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.