பாவூர்சத்திரத்தில் ஆவண எழுத்தர்கள் போராட்டம்.
1 min read
Protest by document writers in Pavurchatram.
10.11.2026
தென்காசி மாவட்டம்,
பாவூர்சத்திரத்தில் ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பத்திர பதிவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு பத்திரபதிவு துறையில் 3.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஆவணங்கள் இ;ல்லாத பத்திரபதிவு, பொதுமக்கள் நேரில் வராமல் பத்திரபதிவு செய்யும் வசதி உள்ளிட்ட தனியார் மயமாக்கல் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திர ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறியும், இத்திட்டத்தை கைவிடக்கோரி தமிழக பத்திர பதிவு ஆவண எழுத்தர்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி பாவூர்சத்திரத்தில் உள்ள பத்திரபதிவு ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் ஆகியோர் இணைந்து பத்திர பதிவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திரண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு அந்தோணி குரூஸ் தலைமை வகித்தார். ஆசீர்ராஜ் முன்னிலை வகித்தார். சிவசூர்யா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் ஆவண எழுத்தர்கள் ராஜாசாமுவேல், முத்தமிழ்செல்வன், தேவகி, சந்திரபாண்டியன், வெங்கடேஷ், பாலு, தங்கத்துரை,டியூக் சாம்ராஜ், வழக்கறிஞர்கள் தங்கராஜ், பாஸ்கர், குத்தாலிங்கம், கவியரசன், தங்கமுருகன். சுதிஷ்குமார், மணியரசு, ராஜசினீஸ்வரன், சிவா, பாலமுருகன், முத்திரைதாள் விற்பனையாளர்கள் ஆவுடையப்பன். சிவசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்றும் (நவ.11) இப்போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். இப்போராட்டத்தினால் பொதுமக்கள் வருகையின்றி சார்பதிவாளர் அலுவலகம் வெறி;ச்சோடி காணப்பட்டது.