தென்காசி மாவட்டத்தில் 20-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
1 min read
Private sector job fair to be held in Tenkasi district on the 20th
16.11.2026
20.11.2026 அன்று தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், நவம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20.11.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், குத்துக்கல் வலசை முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் அருகில். KFC. பின்புறம்) செயல்பட்டு வருகிறது.
இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு.ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய வேவைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in στο வேட்பாளர் உள்நுழைவு -விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் ஸ்ரீ www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Login-ல் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்யவேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலக tenkasi_employment_office என்ற Instagram பக்கத்தை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியாயம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எதிலும் பாதிக்கப்படாது. இவ்வேலைவாய்ப்புமுகாமில் தென்காசி மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, கேட்டுக்கொண்டுள்ளார்.