அண்ணா நூலக அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்
1 min read
Anti-Corruption Bureau summons Anna Library officials
17.11.2026
கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்களை கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நூல்கள் வாங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவில் இடம் பெற்றிருந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் பகீர் குற்றச்சாட்டை கூறினார்.
தி.மு.க. ஆட்சியில்தான் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இந்த ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் சார்பில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று தி.மு.க. சார்பிலும் தனி புகார் மனு கொடுக்கப்பட்டது.
அமைச்சர் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட 11 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போலி நூல் கொள்முதல் விவகாரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நூலக காப்பாளர், நூலக செயலாளர் உட்பட 4 பேருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை கொண்டு விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.