November 18, 2026

Seithi Saral

Tamil News Channel

பனி படர்ந்த காஷ்மீர் மலைப்பகுதிகளில் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பு

1 min read

Indian Army maintains strict surveillance in the snow-covered mountain regions of Kashmir

17.11.2026
ஜம்மு-காஷ்மீரின் உயரமான மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையிலும், பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க இந்திய ராணுவத்தினர் உறைபனியைப் பொருட்படுத்தாமல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வா பள்ளத்தாக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கும் கீழே சரிந்துள்ளது. எங்கும் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் இந்த கடுமையான வானிலையிலும், இந்திய ராணுவ வீரர்கள் சற்றும் ஓய்வின்றி எல்லையில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

பனிப்பொழிவைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதைத் தடுக்கும் வகையில், இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையும் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் பனி படர்ந்த மலை உச்சிகளில் நவீன ஆயுதங்களுடன் வீரர்கள் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, பூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியிலும் ஊடுருவல் சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, பதேர்வா உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, எல்லைப் பகுதிகள் முழுமையாக ராணுவத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *