November 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே லாட்டரி விற்ற 5 பேர் கைது

1 min read

5 people arrested for selling lottery tickets near Tenkasi

20.11.2026
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுநீர் குளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெரியசாமி என்பவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 66), வைத்தியலிங்கம் என்பவரது மகன் வடிவேல் (வயது 54), முகமது ஹகீன் என்பவரது மகன் சம்சுதீன் (வயது 76), முப்புடாதி என்பவரது மகன் வேலுச்சாமி (எ) கண்ணன் (வயது 39), சாகுல் ஹமீத் என்மவரது மகன் மைதீன் (வயது. 48) ஆகிய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *