November 24, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: 8ந் தேதி முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

1 min read

Tenkasi: Special grievance redressal meeting for ex-servicemen on the 8th

24.11.2026

தென்காசி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 08 ம் தேதி அன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் 08.12.2026 அன்று நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் படைவீரர் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் 08.12.2026 அன்று மாலை 03.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு உரிய விண்ணப்பமாக இரண்டு பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறும் இத்தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு கூட்டத்தில் பங்குகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு மோனிகா ராணா கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *