தீபம் ஏற்றாததன் விளைவுகள் விபரீதமானது-அண்ணாமலை கண்டனம்
1 min read
The consequences of not lighting the lamp are dire – Annamalai condemns the act
24.11.2026
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தவெக (TVK) அரசு “அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை” நிகழ்த்திவிட்டதாக அண்ணாமலை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை தவெக அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் எனவும் அண்ணாமலை எச்சரித்திருந்தார்.
ஆனால் இன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத நிலையில், அரசுக்கு எதிராகப் போராட்டங்களும் கைது நடவடிக்கைகளும் நடைபெற்றுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை இன்று (நவம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளைத் துச்சமாக நினைத்துத் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டுள்ளது தவெக அரசு; நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை ஒரு சாமானியனாக என்னாலேயே தெளிவாக உணர முடிகிறது.
தமிழக முதலமைச்சர் விஜய்யைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துகின்றனர்; அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசு, அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திவிட்டது” இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.