தென்காசி: ஒரேநாளில் போக்சோ குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
1 min read
Tenkasi: Two POCSO offenders imprisoned under the Goondas Act on the same day
24/11/2026
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் போக்சோ வழக்கின் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், பரிந்துரையின் பேரில், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி – கடையம் செல்லும் சாலையில் உள்ள எல்லைப்புலி பகுதியை சேர்ந்த தங்கையா என்பவரது மகன் மாரியப்பன் (வயது33) மற்றும் கிளாங்காடு பகுதியை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் கொத்தாலராஜ் என்ற குமார் (வயது 33) ஆகிய இரண்டு நபர்கள் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் பரிந்துரை படி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குற்றவாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.