November 26, 2026

Seithi Saral

Tamil News Channel

ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளிடம் – வெள்ளிக்கொடி திருட முயன்றவர் கைது

1 min read

Man arrested for attempting to steal a ‘vellikkodi’ from tourists at Five Falls

25.11.2026
குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் இடுப்பில் கட்டியிருந்த வெள்ளிக் கொடிகளை கத்தியால் அறுத்து திருட முயன்றவரை சக சுற்றுலா பயணிகள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டம், மூப்பனூர் அருகே உள்ள எம். ஓட்டைப்பட்டி மேலத்தெ ருவைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு குழுவாக வந்து ஐந்தருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். சுற்றுலா பய ணிகளான மணிகண் டன், சிங்காரவேலன் ஆகியோரின் இடுப்பில் கட்டியிருந்த வெள்ளிக் கொடிகளை அருகில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் அறுத்து திருட முயன்றுள்ளார்.

இதனை கவனித்த மணி கண்டன், அந்த நபரை பிடித்தார். தொடர்ந்து அருகிலிருந்து சக சுற்றுலா பயணிகளும் அவரைப் பிடித்து அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து குற் றாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துதிலகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில் பிடி பட்ட நபர் கடையநல்லூர் நல்லூர் பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (வயது 54) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். திருட முயன்ற இரு வெள்ளிக்கொடிகளின் மதிப்பு சுமார் ரூ.29 ஆயிரரம் என போலீசார் தெரி வித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *