தென்காசி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு முகாம்
1 min read
Vaccination camp against Peste des Petits Ruminants (PPR) in Tenkasi district
25.11.2026
தென்காசி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய கால்நடை நல மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டு இரண்டாவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் PPR தடுப்பு பணிகள் 23.11.2026 முதல் 24.12.2026 வரை கால்நடை பராமரிப்பு துறை மூலம் செயல்படுத்தப்படும்.
ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆர் வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அசைபோடும் பிராணியான வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டினங்களில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தி ஆட்டினங்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அபாயமான நோயாகும். இந்த வைரஸ் பாதித்த ஆட்டினங்களில் அதிக காய்ச்சல் 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். அதிக சோர்வு, மூச்சுத்திணறல், மூக்கிலிருந்து கட்டியான சளி வெளிப்படுதல், இருமல் மேலும் வாயின் உட்புறம் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல், உணவு தீனி உட்கொள்ள முடியாமல் அதிகம் சோர்ந்து காணப்படுதல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
எனவே ஆட்டினங்களுக்கு ஆட்டுக்கொல்லி நோய் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாத வயதுக்கு மேலுள்ள சினை இல்லாத ஆரோக்கியமான வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கு கண்டிப்பாக தங்கள் பகுதியில் நடைபெறும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பு முகாமில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு ஆட்டுக்கொல்லி நோயிலிருந்து பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.