சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
1 min read
7 Ayyappa devotees who went to Sabarimala pass away due to ill health
25.11.2026
சபரிமலையில் தரிசனத்திற்காக சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். நவ.18ம் தேதி முதல் 24ம் தேதி வரை இதய பாதிப்பு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக 7 பக்தர்கள் உயிரிழந்தனர்.
தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சுவாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். இந்த நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக இதுவரை 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் இதுவரை திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 14 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஒரே வாரத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடல்நிலையைப் பரிசோதனை செய்து கொண்டு, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மலை ஏறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பம்பையிலேயே மருத்துவக் குழுவினர் செய்துள்ளனர்.
உடல்நலக் குறைபாடு உள்ள பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு முன் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் பல இடங்களில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.