November 27, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறார் கவர்னர்

1 min read

Thiruparankundram ‘Deepam’ issue: Governor seeks explanation from Tamil Nadu government

25.11.2026
திருக்கார்த்திகை நாளான நேற்று (நவ.,24) மட்டும் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்று சில நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஐகோர்ட் மதுரைக்கிளையிலும் கலெக்டர், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றப் போவதாக கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு நிறைவேற்றப்படும் என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகளும் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால், நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தபடி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தான் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்டு கலெக்டர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், ” உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதா என்பது குறித்து சட்டப்பிரிவு 167 பின் கீழ் விளக்கம் அளிக்க வேண்டும். அது குறித்து அரசு முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும். ஏதேனும் விதிமீறல் இருந்தால் அல்லது உத்தரவுகளை நிறைவேற்றத் தவறிய நிகழ்வு இருந்தால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். நேற்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக இருந்த அரசு உத்தரவு, போலீசார் அறிவுரை குறித்தும் தெரிவிக்க வேண்டும் ” என கவர்னர் கூறியுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *