November 27, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதியில் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக அளித்த தமிழக பக்தர்

1 min read

Devotee from Tamil Nadu donates 121 kg of gold ornaments at Tirupati

26.11.2026
ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கோவிலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.இதனால் இந்தியாவின் அதிக வருவாய் ஈட்டும் கோவில் நிர்வாகங்களில் ஒன்றாக திருப்பதி தேவஸ்தானம் திகழ்கிறது. பக்தர்கள் ரொக்கமாகவும், தங்கமாகவும் கோவிலுக்கு காணிக்கை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க ஆபரணங்கள் 9 தொகுப்புகளாக 45 வகையான நகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏழுமலையானுக்கு தனிநபர் ஒருவர் வழங்கும் மிகப்பெரிய காணிக்கையாக இது இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

121 கிலோ தங்கம் அளித்த அந்த பக்தர், அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு, தனது முயற்சிகளில் வெற்றி பெற வேண்டி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தார். பின்னர், அவர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்துள்ளார். அந்த பக்தர் தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்றதன் மூலம் 6,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனைக்குப் பிறகு, தனது செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நலப் பணிகளுக்காகச் செலவிடவும், இறைவனுக்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் அவர் முடிவு செய்தார்.

அவர் அறிவித்தபடி திருப்பதி ஏழுமலையானுக்கான நேர்த்திக்கடனாக, பெட்டி பெட்டியாக தங்க நகைகளை கொண்டு தேவஸ்தான அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *