November 28, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழுவை கூண்டோடு கலைப்பு- சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

1 min read

Supreme Court orders the dissolution of the entire Board of Trustees for Tirupparankundram

27.11.2026
திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவை சுப்ரீம்கோர்ட்டு கலைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது, “சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. அறங்காவலர் குழுவின் அறிக்கையை காட்டி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் போனது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும்” என மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது.

சீராய்வு மனுவை தாக்கல் செய்தது தமிழக அரசின் தந்திர போக்கை காட்டுவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மத்திய தொல்லியல்துறையினர் தீபத்தூணை ஆய்வு செய்ய தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்ற மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை என கோவில் அறங்காவல் அலுவலர்கள் கூறினர் என்று மத்திய தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் நீதிபதிகள் அரவிந்த் குமார், பஞ்சோலி அமர்வு கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் எங்களது தீர்ப்பை நிறைவேற்றாதாது மிகுந்த வேதனை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகள் தங்களது கடமையை செய்யத் தவறி விட்டனர். அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்ப்பை மீறி உள்ளனர்.

தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, நாங்கள் முதலில் தெரிவிக்க விரும்பும் வார்த்தை அய்யோ (Alas) என்பதுதான். தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான வெளிப்பாடாக இந்த வார்த்தை இருக்கும்; மிகுந்த வேதனையுடனும். மனத்துயரத்துடனும் இதனை தெரிவிக்கிறோம்.

மாநில அரசும் கோவில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன. இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும். கோவில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (28.11.2026) தீபம் ஏற்றலாம். மலை முழுவதும் சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். சட்டம் ஒழுங்கு அமைதியை சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தர்காவிற்கு வழிபாடு நடத்த செல்பவர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தர்காவிற்கு செல்பவர்களை யாரும் தடுக்க கூடாது. தர்காவை சுற்றி 50 மீ தொலைவில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தர்கா, கோவில் பகுதியை வேறுபடுத்த வேலி அமைக்கலாம்.

உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய மண்டபத்தில் இருந்து சுடரை எடுத்து சென்று தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் நேரத்தை, ஒய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான நிர்வாக குழு முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *