மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதி மறுவரையறை செய்ய ராகுல் வலியுறுத்தல்
1 min read
Rahul urges delimitation of constituencies based on population census
28.11.2026
டெல்லியில் நிருபர்களிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியதாவது:
ஜாதி வாரி கணக்கெடுப்பு ஒதுக்கி வைக்கப்பட்டது. 2027 ம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அது பாஜக விரும்பாத சில மிகவும் சங்கடமான உண்மைகளை வெளிப்படுத்தும். எனவே 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை பயன்படுத்த போகின்றனர்.
2051 வரை அனைத்தும் முடக்கப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு சமூக நீதியை மறந்துவிடலாம். அவர்கள் சிறுபான்மையினர், பட்டியல் மற்றும்பழங்குடியினருக்கான இடங்கள் 40 ஆண்டுக்கு முடக்கப்படும்.
ஜனநாயகத்தின் அடித்தளங்களை மறுவடிவமைக்க பாஜகவுக்கு ஒரு வெற்றுப்பாதையை வழங்குவதுதான் இங்குள்ள கேள்வி
மின்னணு ஓட்டு இயந்திரம், தேர்தல் நடவடிக்கைகளை கைப்பற்றி விட்டனர். தற்போது ஒட்டுமொத்த அரசியலமைப்பு கட்டுமானத்தை அழிக்க விரும்புகின்றனர். இந்த நாட்டை சர்வாதிகாரமாக மாற்ற முயற்சிக்கும் பாஜகவை அனுமதிக்க மாட்டோம். அது நடக்காது. ஓட்டுத் திருட்டில் பாஜகவை இளம் தலைமுறையினர் ஓரங்கட்டிவிட்டனர். அவர்களின் பாதையை மூடிவிட்டோம். இதனால், புதிய திட்டத்தில் புதிய பாதையை திறக்க முயற்சிக்கின்றனர்.
850 எம்பிக்களுடன் உள்ள தொகுதி மறுவரையறை மசோதா தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. தேர்தலை முறைகேடு செய்யும் எண்ணமாக 850 வருகிறது. 543 ல் வைத்துக் கொள்வதால் எந்த பிரச்னையுமில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. 543ல் பெண்கள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் எந்த பிரச்னையுமில்லை. அதனை பார்லிமென்டில் ஆதரிப்போம்.
ஜெகன்மோகன், சந்திரபாபு உள்ளிட்ட தேஜ கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இந்திய ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது. தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள்.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தொகுதிமறுவரையறையை செய்ய வேண்டும். இந்திய வரைபடத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்க முயற்சி செய்கிறது. அது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும்.
இவ்வாறு ராகுல் கூறினார்.