June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன் கோவில் அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி

3 cows die of electrocution near Sankaran temple

14/3/2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு சொந்தமான 3 மாடுகள் அதே ஊரில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது மாடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகளின் கொம்புகளுக்கு இடையில் அந்த மின்சார வயர் சிக்கியதால் அந்த மாடுகள் மின்சாரம் தாக்கி அந்தப் பகுதியிலேயே துடிதுடித்து இறந்தன.

தகவல் அறிந்த சங்கரன்கோவில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர்.

மேலும் சங்கரன்கோவில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து மூன்று மாடுகளையும் அதே இடத்தில் புதைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.