June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிமுத்தாறு பொதிகை. மலை அடிவாரத்தில் விதைப்பந்துகள் வீச்சு

Manimutharu Pothikai. Throwing seed balls at the foot of the mountain

15/2/2026
நேரு நர்சிங் மாணவிகள், செவிலியர்கள், டிரஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்த பத்தாயிரம் விதைப்பந்துகளை மணிமுத்தாறு பட்டாலியனுக்கு கொண்டு வந்து நேரு நர்சிங் கல்லூரி ஒப்படைத்தது. ஊசி, மாத்திரை, மருத்துவ உபகரணங்களை கையாளும் நர்சிங் மாணவியர் கைகள் செய்த விதைப்பந்துகளை துப்பாக்கி, லத்தி பிடிக்கும் காவல்துறையின் இரும்பு கரங்கள் இணைந்து மணிமுத்தாறு பொதிகை மலை அடிவாரத்தில் விதைப்பந்துகள் வீசப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மணிமுத்தாறு தமிழக சிறப்பு காவல் படை 9 வது அணியின் கமாண்டண்ட் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துணை தளவாய் வி.எஸ். தீபா முன்னிலை வகித்தார். உதவி தளவாய்கள் குமார் மற்றும் ஸ்ரீதேவி, நேர்துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் பூதப்பாண்டி, நிகழ்வினை ஒருங்கிணைத்தனர். ஹவில்தார் மைமூன் வரவேற்றார். வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் திருமதி, மார்கரட் ரஞ்சிதம் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார்..”ஒரு கோடி விதைப்பந்துகள் திட்ட கர்த்தா வெங்காடம்பட்டி பூ.திருமாறன் நிகழ்வில் கலந்துகொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
எத்தனை ஆயிரம் விதைப்பந்துகள் என்றாலும் அதை மரம் ஆக்குவோம் நர்சிங் மாணவிகள் போலீஸ் பட்டாலியன் சூளுரை இயற்கைக்கு வலிமை சேர்க்க எத்தனை ஆயிரம் விதைப்பந்துகள் என்றாலும் பள்ளி கல்லூரிகள் கொண்டு வரலாம், போலீஸ் பட்டாலியன் கதவுகள் திறந்தே உள்ளன என மணிமுத்தாறு தமிழக சிறப்பு காவல் படை 9 வது அணியின் கமாண்டண்ட் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நர்சிங் மாணவிக்கும், ஒவ்வொரு பட்டாலியன் காவலருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தென்காசி “டெல்டா” அகமது சுலைமானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நர்சிங் மாணவியருக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கிறது என மாணவிகள் தெரிவித்தனர். இதுவரை 54 லட்சத்து 10 ஆயிரம் விதைப்பந்துகள் செய்து எறியப்பட்டுள்ளதாக திருமாறன் தெரிவித்தார். அனைத்து தன்னார்வலர் களுக்கும் மாணவிகளுக்கும் பட்டாலியன் சார்பு ஆய்வாளர்கள் ஜெயராஜ், லாவண்யா, செல்வ சாய் கீதா, மாரியம்மாள், கவிதா பசியாற்றும் பெரும் தொண்டாற்றினர்.

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி பேராசிரியை சிந்துஜா, விரிவுரையாளர்கள் சுப்ரியா, சுப்புலட்சுமி, திவ்யா மற்றும் ஊழியர் ஜாஸ்மின் விதைப்பந்து நிகழ்வில் கல கலந்து கொண்டனர். கொண்டனர். விதைப்பந்து தயாரிக்கும் பள்ளி கல்லூரிகள் அதனை மரம் ஆக்கிட மணிமுத்தாறு பட்டாலியனில் ஒப்படைக்க தளவாய் கார்த்திகேயன் துணைத்தலைவாய் தீபா சமூக சேவகர் திருமாறன் வேண்டுகோள் விடுத்தனர். பட்டாலியன் அவில்தார் ராஜேஸ்வரி, முருகேஷ், எட்வின் ஜோஸ் நர்சிங் மாணவிகளை உற்சாகப்படுத்தினர். காந்திதாசர் கலந்து கொண்டார். நேரு நர்சிங் கல்லூரி சேர்மன் வள்ளியூர் லாரன்ஸ் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.